நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழியர்களுக்கு பெருநாளுக்கு முன் சம்பளத்தை வழங்க கெடா ஜிஎல்சி நிறுவனம் ஒப்புதல்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

ஊழியர்களுக்கு பெருநாளுக்கு முன் சம்பளத்தை வழங்க கெடா ஜிஎல்சி நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மக்களவையில் தெரிவித்தார்.

கெடா அரசாங்கத்தின் துணை நிறுவனமான கெடா அக்ரோ ஹோல்டிங்ஸ் தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்கவில்லை என்ற புகார்கள் பெறப்பட்டது.

கடந்த மார்ச் 17ஆம் தேதி கெடா அக்ரோ ஹோல்டிங்ஸ், மாநில அரசு சம்பள பாக்கிகள் தொடர்பாக சந்திப்பு நடத்தப்பட்டது.

தற்போதைய நிலுவையில் உள்ள சம்பளம் மொத்தம் சுமார் 560,000 ரிங்கிட் ஹரி ராயாவுக்கு  முன் வழங்க அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. 

மேலும் மார்ச் 2024 இறுதிக்குள் அதன் செயல்பாடுகளை நிறுத்திவிடும் என்றும் வாரியம் முடிவு செய்துள்ளது.

எனவே, பணிநீக்கத்திற்குரிய ஊதியம், அறிவிப்பு ஊதியம் மார்ச் முதல் மூன்று மாதங்களுக்குள் வழங்கப்படும்.

எந்தவொரு புகார் செய்யப்பட்டாலும் அதை விசாரிக்கத் தயாராக இருக்கும் தீபகற்ப மலேசிய மனிதவளத் துறை தயாராக உள்ளது.

ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹுடா ஹசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஸ்டீவன் சிம் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset