நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடகங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான கட்டமைப்பை எம்சிஎம்சி இறுதி செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளது: தியோ நீ சிங்

கோலாலம்பூர்: 

மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் நாட்டில் செயல்படும் அனைத்துச் சமூக ஊடகங்களுக்கும் உரிமம் வழங்குவதற்கான கட்டமைப்பை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் துணை தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் மக்களவையில் தெரிவித்தார். 

முன்மொழியப்பட்ட உரிம அமலாக்கம், குறிப்பிட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில், மலேசியாவிலுள்ள பயனர்களுக்கு அணுகக்கூடிய சமூக ஊடக சேவை வழங்குநர்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்கள், இணையச் செய்தியிடல் தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் இலக்கு உரிம அமலாக்க முன்மொழிவு விகிதாசாரமாக கருதப்படுகிறது.

முன்மொழியப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகள் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், தேசியச் சட்டங்களை மீறும் உள்ளடக்கத்தை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் தற்போதைய உலகளாவிய அணுகுமுறைகள் மற்றும் முன்னேற்றங்களுடன் ஒத்துப்போகின்றன. 

இந்த நடவடிக்கை ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கமல்ல என்றார் அவர். 

நாட்டில் செயல்படும் அனைத்து சமூக ஊடகத் தள சேவை வழங்குநர்களும் எம்சிஎம்சி-யில் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சகம் முடிவு செய்திருக்கிறதா என்று ஷம்சுல்கஹர் டெலி எழுப்பியக் கேள்விக்கு தியோ இவ்வாறு பதிலளித்தார்.

உள்ளூர் ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கம் மூலம் வருவாய் ஈட்டும் கூகுள், மெட்டா மற்றும் டிக்டோக் போன்ற தளங்களுக்கு உரிமம் வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி  முன்பு தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset