நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலுறைகளில் அல்லா வார்த்தை: கடுமையான நடவடிக்கை எடுக்க திஎம்ஜே வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா: 

அல்லா வார்த்தை அச்சிடப்பட்டிருந்த காலுறைகள் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு கடுமையான நடவடிக்கைகளின் மூலம் இனி மீண்டும் இது போல் ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதைத் தவிர்க்கலாம் என்று இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அல்லா என்ற வார்த்தை இஸ்லாமியர்களின் இதயத்தில் மிகவும் புனிதமான வார்த்தை என்று அவர் குறிப்பிட்டார். 

அதனால் இந்தப் பிரச்சனையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

இந்தப் பிரச்சனையில் தாம் தீவிரம் காட்டுவதாகவும் இது போன்ற செயல் நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்காது என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார். 

கடந்த வாரம் கேகே சூப்பர் மார்ட் கடையில் அல்லா என்று எழுதப்பட்ட காலுறைகளை விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேகே சூப்பர் மார்டின் நிறுவனர் கேகே சாய், கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு தெரிவித்தாலும், இந்த விவகாரம் இன்னும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset