நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷா ஆலம் பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்ஸ் இடிக்கப்படுமா? பிகேஎன்எஸ் மறுப்பு

ஷா ஆலம்:

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 47 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காம்ப்ளெக்ஸ் பிகேஎன்எஸ் மறுநிர்மாணிப்புக்காக இடிக்கப்படும் என வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்று சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் பிகேஎன்எஸ் தெரிவித்துள்ளது. 

இத்தகைய ஆதாரமற்ற தகவல்கள் வெளிவந்தது குறித்து தாங்கள் மிகுந்த வருத்தமடைவதாக கூறிய பிகேஎன்எஸ் இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்தது.

இந்தப் பொய்யானத் தகவல் தொடர்பில் தாங்கள் போலீசிலும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திலும் புகார் செய்யவுள்ளதாக பிகேஎன்எஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த கட்டடத் தொகுதியை உடைக்கும் திட்டம் இல்லை . 

47 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்த கட்டிடம் ஷா ஆலம் மக்களுக்கு வர்த்தக மற்றும் இதரச் சேவைகளை வழங்கும் மையமாக விளங்கி வருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழி விடும் வகையில் பிகேஎன்எஸ் மற்றும் ஆலம் சென்ட்ரல் உள்ளிட்ட மாநகரின் மையப்பகுதியில் உள்ள சில கட்டடங்கள் இடிக்கப்படும் என்று சமூக ஊடகப் பயனாளர் ஒருவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருந்தார்.

இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்ட பயனாளர் அந்த பதிவை பின்னர் நீக்கி விட்டார். ஆயினும் சில ஊடகங்கள் இதே போன்றச் செய்தியை வெளியிட்டிருந்தன.

ஷா ஆலம் மாநகருக்குப் புதுப் பொலிவை ஏற்படுத்தும் விதமாக நகரின் மையப்பகுதியான செக்சன் 14-இல் சில மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அப்பணிகள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்றும்  பிகேஎன்எஸ் அறிவித்தது. 

சுமார் 200 கோடி வெள்ளி மதிப்பிலான இந்தத் திட்டம் செக்சன் 14-இல் உள்ள சில வளாகங்களை உள்ளடக்கியிருக்கும். 

அவற்றில் எஸ்ஏசிசி மால், எஸ்ஏசிசி மாநாட்டு மையம் ஆகியவையும் அடங்கும். 

ஆயினும் காம்ப்ளெக்ஸ் பிகேஎன்எஸ் இதில் உள்ளடங்கவில்லை என்று அது தெளிவுபடுத்தியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset