நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரிங்கிட் மாற்று விகிதம் தொடர்பான தவற்றுக்கு கூகுள் மலேசியா மன்னிப்பு கேட்டது

கோலாலம்பூர்:

நிதிப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க டாலர் - ரிங்கிட் மாற்று விகிதம் தொடர்பான தவற்றுக்கு கூகுள் மலேசியா மன்னிப்பு கேட்டுள்ளது.

தவற்றை  சரி செய்ய அமெரிக்க டாலர் - ரிங்கிட் மாற்று விகிதம் குறித்த தகவலை வழங்கிய மூன்றாம் தரப்பினரை நாங்கள் உடனடியாக தொடர்பு கொண்டோம்.

அப்பிரச்சனை இப்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால்ல் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே நாணய மாற்று விகிதங்களை வழங்குவதாகவும் கூகுள் கூறியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset