நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் மன்னிப்பு விவகாரத்தில் எழுந்துள்ள குழப்பத்திற்கு ஸலேஹா, தெரிரூடின் விளக்கமளிக்க வேண்டும்: புவாட்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு எதிரான தண்டனைக் குறைப்பு தொடர்பாக வழக்கறிஞர்கள் மன்றத்தின் முயற்சிக்கும் குழப்பத்திற்கும்  பிரதமர் துறை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலேஹா முஸ்தபா, சட்டத்துறை தலைவர் ஜெனரல் அஹ்மத் தெரிருதீன் சாலே பதில் சொல்ல வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி வலியுறுத்தினார்.

வழக்கறிஞர் மன்ற பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மன்னிப்பு வாரியத்தன் முடிவு நியாயமற்றது போல் காட்டுகிறது.

மேலும் மாட்சிமை தங்கிய மாமன்னரின்  தனிச் சிறப்புக்கு உட்பட்டது அல்ல என்றும் காட்டுகிறது.

ஆகவே நஜீப் தொடர்பாக எழுந்துள்ள இக் குழப்பத்திற்கு சம்பந்தப்பட்ட இருவரும் பதில் சொல்ல வேண்டும்.

குறிப்பாக மக்களுக்கு அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று புவாட் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset