நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

350 குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் உதவிப் பொருட்கள் புக்கிட் ரோத்தான் அன் நூரியா பள்ளிவாசல் வழங்கியது

கோல சிலாங்கூர்: 

புக்கிட் ரோத்தான் அன் நூரியா பள்ளிவாசல் சார்பில் 350 குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கோல சிலாங்கூர் வட்டாரத்தில் பிரபலமான அன் நூரியா இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் பல நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக நோன்புப் பெருநாளை முன்னிட்டு வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் அன் நூரியா பள்ளிவாசலின் இம்முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கி வருகிறார்.

May be an image of 22 people, crowd and text

அதன் அடிப்படையில் இவ்வாண்டும் 350 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 600க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்று அன் நூரியா பள்ளிவாசலின் தலைவர் டத்தோ முஹம்மத் காசிம் அலியா கூறினார்.

நோன்பு காலத்தில் வசதிக் குறைந்த மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.

வரும் காலங்களில் இன்னும் அதிகமானோருக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

May be an image of 6 people and text

இந்நிகழ்வில் கோல சிலாங்கூர் இஸ்லாமிய இலாகாவின் இயக்குநர் ஹாஜி நஸ்ரூல், கோல சிலாங்கூர் ஓராங் பெசார் டத்தோ யாக்கோப், கோல சிலாங்கூர் மாவட்டங்களின் பெங்குலுக்கள், பிரெஸ்மா, சிம்ஸ், பேர்பாகிம், மாம்ஸ் உட்பட பல இயக்கங்களின் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset