நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய பல்நிபுணத்துவ சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்: 

மீடா எனப்படும் மலேசிய இந்திய பல்நிபுணத்துவ சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம், காலா நைட் விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரனும் பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா செயற்குழு தலைவருமான பி.பிரபாகரன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதயமான இந்த மலேசிய இந்திய பல்நிபுணத்துவ சங்கம் நாடு தழுவிய நிலையில் சுமார் 211 பல் நிபுணத்துவ உறுப்பினர்கள் கொண்டுள்ளதாக மீடா சங்கத்தின் தலைவர் டாக்டர் சர்சீலன் செல்வம் கூறினார். 

மேலும், இந்திய சமுதாயத்திற்காக உதயமாகியுள்ள இந்த சங்கம் என்பது இந்திய பல்நிபுணர்களை ஒன்றிணைக்கும் தளமாக அமையப்பெற்றுள்ளது என்று சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.

மேலும், சிகாமாட் தொகுதியில் உள்ள மக்களுக்கு பல் தொடர்பான சிகிச்சை மேற்கொண்டால் அதற்குண்டான சிகிச்சை நிதியைத் தாம் ஏற்றுக்கொள்வதாக யுனேஸ்வரன் கைத்தட்டல்களுக்கு மத்தியில் குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக MIDA சங்கத்தின் அதிகாரபூர்வ பாடலும் வெளியிடப்பட்டது.  

முன்னதாக தலைநகர் KL WELLNESS பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மீடா அமைப்பின் உறுப்பினர் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

- மவித்ரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset