நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய் மொழிப் பள்ளிகள் முந்தைய தலைமையின் புரிதலின் அடையாளம்: அஷ்ரப்

கோலாலம்பூர்:

ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தாய்மொழிப் பள்ளிகள் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இருந்தாலும் நாட்டின் முந்தைய தலைமையின் சகிப்புத்தன்மை, புரிதலின் சின்னமாக இப்பள்ளிகள் உள்ளன என்று அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ரப் வாஜ்டி டுசுகி கூறினார்.

நாட்டில் பல இன சமூகங்களுக்கிடையில் சகிப்புத்தன்மை நிறைந்த மலேசியாவை கட்டியெழுப்பிய வரலாற்றிற்கு அனைத்து தரப்பினரும் திரும்ப வேண்டும்.

தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியாவுடன் ஒப்பிடும் போது மலேசியா ஒரு ஒருங்கிணைப்பு அணுகுமுறையை எடுத்துக் கொண்டது.

இது வடமொழிப் பள்ளிகளை ஒழிக்கும் ஒருங்கிணைக்கும் கொள்கையுடன் உள்ளது. ஆனால் இந்நாட்டில் ஒவ்வொரு இனமும், அவரவர் விருப்பங்களையும், நலன்களையும் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, சீனர்கள் மொழி, கலாச்சாரம், கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.

எனவே அவர்கள் தங்கள் சீனப் பள்ளி அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள், 

இது முன்னாள் பிரதமர் துன் ரசாக்கின் தேசியக் கல்விக் கொள்கையின் பின்னணியில் சமரசம் செய்யப்படுகிறது, என அஷ்ரப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset