நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிள்ளைகளுக்கு தேர்வு உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்து பெற்றோர் விடுபட வேண்டும்: சுரேந்திரன்

கோலாலம்பூர்:

பிள்ளைகளுக்கு தேர்வு உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்து பெற்றோர் விடுபட வேண்டும்.

ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா கூறினார்.

ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கியது முதல் 6ஆம் ஆண்டு மாணவர்கள்தான் இங்கு அதிகம் வந்து கல்வி பயில்கின்றனர்.

ஆனால், இம்முறை 6ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது.

இதற்கு காரணம் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதாதது ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

ஆமாம் தேர்வு இல்லை தான். பின் ஏன் இடைநிலைப் பள்ளிகளில் புகுமுக வகுப்பு உள்ளது.

புகுமுக வகுப்பை தாண்டி மாணவர்கள் எப்படி நேரடியாக படிவம் 1க்கு செல்கிறார்கள் என்பதை பெற்றோர் சிந்திக்க வேண்டும்.

அதற்கு பிள்ளைகளை தயார் செய்வது குறித்தும் பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

அதற்கு தேர்வு உள்ளதா இல்லையா என்பது குறித்து சிந்திகாமல் பிள்ளைகளை எப்படி அனைத்து சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய சமூகம் எந்த வகையில் பிரிந்து இருந்தாலும் கல்வி என்று வந்தால் அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும்.

இது தான் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்கு என்று சுரேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset