நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்மொழிப் பள்ளிகள் சர்ச்சை தொடர்பில் விவாதிக்க அம்னோ, ஜசெக கட்சிகள் தயார்

கோலாலம்பூர்:

ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அம்னோ, ஜசெக ஆகிய இரு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான பிரச்சினை பற்றி பேச உடன்பட்டுள்ளனர். 

இது, நீண்டகாலப் போட்டியாளர்களுக்கு இடையிலான நாகரிகமான பேச்சுவார்த்தையின் நம்பிக்கையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சாலே சீன, தமிழ்ப் பள்ளிகள் நாட்டின் பல இன சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்துகின்றன. ஒற்றுமைக்கு தேசிய பள்ளியே சிறந்தது என்று கூறினார்.

மலேசியாவில் பொதுப் பள்ளிக் கல்வி, மலாய் மொழியில் கற்பிக்கப்படும் தேசியப் பள்ளிகள் அல்லது சீனம் அல்லது தமிழ் மொழியில் கற்பிக்கும் பள்ளிகள் என பிரிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பள்ளிகள் பாதுகாக்கப்படுகின்றன.

டாக்டர் அக்மல்  வெளியிட்ட  அறிக்கையில், மலேசியாவிலுள்ள 1,800க்கும் மேற்பட்ட தாய்மொழிப் பள்ளிகளை அரசாங்கம் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டுமென பரிந்துரைத்திருந்தார்.

தாய்மொழிப் பள்ளிகள் இனப் பிரிவினைக்கும் ஒற்றுமையின்மைக்கும் காரணம் என்று எண்ணுவது தவறான கருத்து என்று பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பி. இராமசாமி டாக்டர் அக்மாலைச் சாடினார்.

அக்மால் தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்க விரும்புகிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் மார்ச் 11 ஆம் தேதி, ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் இதுகுறித்து பேச்சு நடத்த டாக்டர் அக்மலுக்கு முகநூலில் அழைப்பு விடுத்தார்.

அழைப்பை டாக்டர் அக்மல் ஏற்றுக்கொண்டார். நாளை இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset