நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெக்குன் கடனுதவிக்கான விண்ணப்பங்களுக்கு 4 ஆவணங்கள் மட்டும் போதுமானது: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்:

தெக்குன் கடனுதவிக்கான விண்ணப்பங்களுக்கு 4 ஆவணங்கள் மட்டும் போதுமானது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

தெக்குன் கடனுதவிக்கு இதற்கு முன்பு 17 ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் இப்போது 4 ஆவணங்கள் மட்டுமே போதுமானது.

விண்ணப்பத்தாரர்கள் அவரின் கணவர் அல்லது மனைவியின் அடையாளா அட்டை பிரதி, விண்ணப்பத்தாரின் வர்த்தக் பதிவு, 3 மாத வங்கி கணக்கு அறிக்கை, வியாபார இடத்தின் புகைப்படம் ஆகியவை இந்த 4 ஆவணங்களாகும்.

அதே போல் முன்பு கடனுதவி விண்ணப்ப, அங்கீகரிப்பு கால அவகாசம் 21 வேலை நாட்களாக இருந்தது.

ஆனால் தற்போது அந்த கால அவகாசம் 7 வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தங்கள் வர்த்தகத்தை விரிவுப்படுத்த விரும்பும் வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் கடன் தொகையை எளிதாகப் பெறுவதற்கு உதவ இவை அனைத்தும் முன்னடுக்கப்படுகின்றன.

ஆகவே இந்த வாய்ப்புகளை வர்த்தகர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset