நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க டாலர், ரிங்கிட் பரிமாற்ற வீதத் தரவை கூகுள் மீண்டும் தவறாக வெளியிட்டது: பேங்க் நெகாரா

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலர், ரிங்கிட் பரிமாற்ற வீதத் தரவை  கூகுள் மீண்டும் தவறாக வெளியிட்டது

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றூ பேங்க் நெகாரா குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று கூகுள் வெளியிட்ட தவறான அமெரிக்க டாலர், ரிங்கிட் மாற்று விகிதத்தின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பரவும் தவறான ரிங்கிட் மாற்று விகிதத் தரவை பேங்க் நெகாரா நிராகரித்துள்ளது.

இது ஒரு தவறான தகவல், இது உண்மையான வர்த்தகத்தை பிரதிபலிக்காது என்று பேங்க் நெகாரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று, காலை 9 மணிக்கு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 4.7015 என குறிப்பிடப்பட்டது. 5 மணிக்கு அது 4.7045ஆக இருந்தது.

பேங்க் நெகாரா  இணையதளத்தில் வெளியிடப்பட்டபடி, 

ரிங்கிட்டுக்கான வங்கிகளுக்கு இடையேயான சந்தையில் 4.7075 இன் இன்ட்ராடே அதிகபட்சம்.

கடந்த இரண்டு வாரங்களில்  ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக 0.76% வலுவடைந்துள்ளது என்று அது கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset