நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதற்கு முன் அரசாங்கம் அது குறித்துப் பரிசீலிக்கும்: அன்வார்

ஹம்பர்க்: 

2026-ஆம் ஆண்டுகான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை மலேசியா ஏற்று நடத்துவது தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்கு முன் அரசாங்கம் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பரிசீலிக்கும் என்று பிரதமர் அன்வார் கூறினார். 

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ, தேசிய விளையாட்டு மன்றம், அது தொடர்புடைய தரப்பினரிடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

நேற்றையக்ட்டத்தில் இந்த வாய்ப்பைப் பற்றி விவாதிக்குமாறு அமைச்சரவையைக் கேட்டதாகவும், அடுத்த வாரம் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அன்வார் கூறினார்.

கடந்தா ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவிற்கு பதிலாக மலேசியாவிற்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்த வழங்கிய வாய்ப்பைக் குறித்துக் கேட்டப்போது அன்வார் இவ்வாறு கூறினார். 

இந்த வாய்ப்பைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருப்பதை அறிந்திருப்பதாகவும், ஆனால் அதை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் முக்கியத்துவத்தையும் எந்த முடிவும் எடுப்பதற்கு முன் பார்க்க வேண்டும்.

சலுகை விவகாரம் குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விவாதிக்கும் என்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் ஏற்கும் என்றும் அன்வார் கூறினார்.

முடிவெடுப்பதற்கு முன் அனைத்து சாதக பாதகங்களையும் நாங்கள் பரிசீலிப்போம் என்று அவர் மேலும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset