நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுகாதார அமைச்சு மருத்துவமனைகளில் 23 வெப்ப பக்கவாத சம்பவங்கள் பதிவு

புத்ராஜெயா:

இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து கடந்த  திங்கள்கிழமை வரை மலேசியச் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில்  மொத்தம் 23 வெப்ப பக்கவாத சம்பவங்கள்  பதிவாகியுள்ளன என்று சுகாதாரத் துறைத் தலைமை இயக்குநர்  டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

கெடா, பேராக், சிலாங்கூர், சபா, பெர்லிஸ் மற்றும் பகாங் ஆகிய இடங்களில் இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று ரமலான் சந்தை  உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இயக்க  நிகழ்வுக்குப் பிறகு இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  அவர் தெரிவித்தார்.

பதிவான சம்பவங்களைப் பொறுத்தவரை, லங்காவியில் ஒரு நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் என்று  டாக்டர் முகமது ராட்ஸி கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு   சுவாச உதவி தேவைப்பட்டது. ஆனால் அவர் சீக்கிரம் சிகிச்சைக்கு  வந்ததால் அவரைக் காப்பாற்ற முடிந்தது  என்று அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset