நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் மோசடி தொடர்பான குற்றப் பதிவுகள் அதிகரிப்பு:  எம். குமார்

ஜொகூர் பாரு:

ஜொகூரில் மாநிலத்தில் இதுவரை வணிகக் குற்றங்கள் தொடர்பாக 155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் எம். குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 18 வணிகக் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளன. 

இணையத்தில் பொருட்கள் விற்பனை மோசடி தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இல்லாத முதலீட்டு திட்டம் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

மேலும், இணையத்தில் ஆள்மாறாட்டம் அல்லது தொலைபேசி மோசடி தொடர்பாக 18 வழக்குகள், இல்லாத கடன் மோசடி தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற மோசடிகள் தொடர்பில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மோசடியால் இந்த ஆண்டு தற்போது வரை 3,944,887.09 வெள்ளி ரிங்கிட் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

ஜொகூர் காவல்துறை குழுவானது வணிகக் குற்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களை நேருக்கு நேர் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து நடத்துகின்றது.

மோசடிக்கு ஆளாகாமல் இருக்க தற்போதைய போக்குகள் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset