நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் சந்தையில் விற்கப்படும் உணவுகளில் நச்சுத் தன்மையில்லை: சுகாதார அமைச்சு 

புத்ராஜெயா:

ரமலான்  சந்தைகளில் விற்கப்படும் உணவுகளில் நச்சுத்தன்மை இருப்பது குறித்துச் சுகாதார அமைச்சு இதுவரை எந்தப் புகாரையும் பெறவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அஹம்மத் தெரிவித்தார்.

ரமலான் மாதத்திற்கு முன்னதாக உணவு வளாகம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு கையாளுதல் குறித்து 183 விளக்க நிகழ்வுகளைச்  சுகாதார அமைச்சு  கடை உரிமையாளர்களுக்கு நடத்தியதன் விளைவாக கிடைத்த  பலன் இதுவாகும் என்று  என்று அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி  தொடங்கிய இந்த விளக்கமளிப்பில்   நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1,299 ரமலான்  சந்தைகளில் பங்கேற்றுள்ள  70,334 கடை உரிமையாளர்கள்  சம்பந்தப்பட்டுள்ளனர்  என்றார் அவர்.

உணவில் விஷத்தன்மை இல்லாதது ஒரு நல்ல அறிகுறியாக உள்ளது. பிப்ரவரி முதல்  முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்ட. 

உணவு உரிமையாளர்கள் மற்றும் உணவைக் கையாள்வோருக்கு  தகவல், பயிற்சி நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

ரமலானுக்கு  முன் அனைத்து மாநிலங்களிலுமுள்ள பனிக்கட்டி தொழிற்சாலைகள் உட்பட 324 உணவு தயாரிப்பு வளாகங்களில் சுகாதார அமைச்சு ஆய்வு செய்தது.

உணவு வளாகங்கள் மீதான சோதனையில்  உணவகங்கள், ஹோட்டல்கள் போன்ற இஃப்தார் பஃபே வழங்கும் வளாகங்களும்  உள்ளடங்கியுள்ளன என்றார் அவர்.

இதற்கிடையில், இந்த ஆண்டு புத்ராஜெயா ரமலான்  சந்தையில் உணவு பாதுகாப்பு தொடர்பான  கருத்துகளைப் பெற சுகாதார அமைச்சு கியூ.ஆர். குறியீடுகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். 

ரமலான்   சந்தைகளில்  தூய்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களைப் பயனீட்டாளர்கள்  எளிதாக வழங்குவதற்கு ஏதுவாக  இவ்வாறு செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset