நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன MH370 விமானத்தின் புதிய தேடல் முயற்சிகள் மீது அதிக எதிர்ப்பார்ப்புகள் வேண்டாம்: அன்வார்

பெட்டாலிங் ஜெயா: 

பத்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன  MH370 விமானத்தின் புதிய தேடல் முயற்சிகள் மீது காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் அதிக எதிர்ப்பார்ப்புகள் வைக்க வேண்டாம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.  

இச்சம்பவத்தின் 10-அவது ஆண்டு நினைவு தினத்தின் போது, அமெரிக்க நிறுவனமான ஓஷன் இன்பினிட்டி மூலம் புதிய தேடலை தொடங்குவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் என்று அறிவித்தார்.

டெக்சாஸைத் தளமாகக் கொண்ட ஓஷன் இன்பினிட்டி நிறுவனத்தின் முன்மொழிவை மதிப்பாய்வு செய்த பின்னர், வரும் வாரங்களில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அன்வார் கூறினார்.

எவ்வாறாயினும், காணாமல் போன விமானத்தின் உறவினர்கள் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

தேடலில் நிச்சயம் முடிவு கிடைக்கும் என்ற அவநம்பிக்கையை அவர்களுக்கு வழங்கத் தாம் விரும்பவில்லையென்றும் பிரதமர் கூறினார். 

இருப்பினும், கணிசமான நிதியை செலவழித்துத் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வதாக அவர் தெரிவித்தார்.  

முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு புறப்பட்ட MH370 காணாமல் போனது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset