நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா-ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான நேரம் இது: பிரதமர்

ஹம்பர்க்:

மலேசியா, ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய விவாதங்களை மீண்டும் தொடங்குவதற்கான சரியான நேரம் இது.

இது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்பத்தும்  என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம், ஐரோப்பா ஆசியாவிற்கான நுழைவாயிலாக மலேசியாவைப் பயன்படுத்த முடியும்.

மலேசியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எளிதாக்க தயாராக உள்ளது.

ஆசியான் எப்டிஏ,  வட்டார விரிவான பொருளாதார கூட்டாண்மை, டிரான்ஸ்- பசிபிக் ஆகியவற்றின் விரிவான, முற்போக்கான ஒப்பந்தம் ஆகியவற்றால் எளிதாக்கப்பட்ட திறந்த சந்தைக் கொள்கைகளை ஐரோப்பா பயன்படுத்த முடியும்.

ஹாம்பர்க் நகரில் ஓஸ்டாசியாட்டிஸ் லீபெஸ்மால் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset