நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய மக்களவை உறுப்பினர்கள் புகையிலை நிறுவனத்திற்கு தலை வணங்கியது ஏன்?: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆதங்கம்

பினாங்கு:

சுகாதார அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ லுக்கானிஸ்மான் அவாங் சவுனி நேற்றைய நாடாளுமன்ற அவையில்
அதிர்ச்சியான ஒரு தகவலை கூறியிருந்தார்.

அதாவது, டிசம்பர் 14ஆம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புகையிலை தொடர்பான சட்டத்தில்  ஜிஇஜி  எனப்படும் புதிய தலைமுறையினருக்கான விதியை அகற்றப்பட்டதற்கு புகையிலை நிறுவனங்களின் நெருக்குதலே காரணம் என சொல்லியுள்ளார்.

மேலும், இந்தப் புகையிலை நிறுவனங்கள், நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, புதிய சட்டத்தில் தங்களது விருபத்தை நிறைவேற்றியுள்ளனர்  என துணை சுகாதார அமைச்சர் சொல்லியிருப்பது, மிகுந்த கவலையையும், அதிர்ச்சியையும் தந்திருப்பதாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரியும், புகைப்பதற்கு எதிரான இயக்க பொறுப்பாளருமான என்.வி.சுப்பாராவ் கூறினார்.

புதிய புகையிலை சட்டத்தில் ஜிஇஜி இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். ஆனால் இதற்கு புகையிலை, வேப் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், பி.ப.சங்கம் உட்பட நூற்றுக்கணக்கான சுகாதார அமைப்புகள், மருத்துவ சங்கங்கள், ஆசிரியர்கள் என பலர் ஆதரவு கொடுத்தனர்.

ஆகவே, இந்த புகையிலை நிறுவங்கள், நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசி, புதிய புகையிலை சட்டத்தில், ஜிஇஜி யை அகற்ற வெற்றி பெற்றுவிட்டனர் என சுப்பாராவ் கூறினார்.

எவ்வாறு, ஒரு புகையிலை நிறுவனம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முடிந்தது. அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?

இரண்டாவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஒரு கொடிய மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பொருளின் நிறுவனத்தின் பேச்சை செவிமெடுத்து, புகையிலை சட்டத்தில், ஜிஇஜி க்கு எதிராக வாக்களித்தனர் என்பதை அனைவரும் அறிய விரும்புகின்றனர்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், புகையிலை நிறுவனத்திற்கு தலை வணங்கியது ஏன்?

இது  தொடர்பாக அரசாங்கம் விசாரணை செய்ய, அரச விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.

புகையிலை நிறுவனங்களை சந்தித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என  சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset