நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நடெல்லாவுடன் அமைச்சர் ஜப்ரூல் சந்திப்பு

கோலாலம்பூர்:

மலேசியாவை ஆசியாவின் இலக்கவியல்  மையமாக மாற்றுவதற்கான வியூகங்களைத் திட்டமிடுவதற்காக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜப்ருல் அப்துல் அஜீஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல்முறை அதிகாரியுமான சத்யா நாடெல்லாவுடன்  சந்திப்பு நடத்தவுள்ளார்.

கெக்கால் பெர்சாமா மலேசியா என்ற முன்னெடுப்பின் வழி  மலேசியா, மைக்ரோசாப்ட் இடையிலான ஒத்துழைப்பின் வாயிலாக நாட்டை ஆசியானின் இலக்கவியல் மையமாக மாற்றுவதற்கான வாய்ப்புள்ளது என்று அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக  சத்யா விரைவில் மலேசியாவிற்கு வருகை மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.

ஆசியான் இலக்கவியல்  துறையில் மலேசியாவின் தலைமையை உயர்த்துவதில் மைக்ரோசாப்ட் உடனான நெருக்கமான ஒத்துழைப்பை பெரிதும் எதிர் பார்ப்பதாகவும் தெங்கு சஃப்ரூல்  தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் ஸ்டீவ் பால்மருக்குப் பதிலாக மைக்ரோசோப்ட்  தலைமை நிர்வாக அதிகாரியாகவும், 2021-ஆம் ஆண்டு  ஜான் டபிள்யூ. தாம்சனுக்கு பதிலாக அந்தப் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராகவும்  சத்யா பதவியேற்றார்.

வரும் மார்ச் 20-ஆம் தேதி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும்  ‘மைக்ரோசாப்ட் பில்ட்: ஏஐ டே’ நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் புதிய சகாப்தம் குறித்த தொடக்க உரையைச் சத்யா வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset