நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைபர்ஜெயாவில் 2ஆவது ஆரம்பப் பள்ளி கட்டப்படும்: கல்வியமைச்சு

புத்ராஜெயா:

சைபர்ஜெயாவில் உள்ள இரண்டாவது தொடக்கப் பள்ளி திட்டத்திறகு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொள்முதல் செயல்பாட்டில் உள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

12ஆவது மலேசியத் திட்டத்தில் சைபர்ஜெயா ஆரம்பப் பள்ளி (2) திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

சைபர்ஜெயா ஆரம்பப் பள்ளி மாணவர்களின் கூட்ட நெரிசலுக்கு தீர்வு காண நீண்ட கால தீர்வாக இருக்கும்.

புதிய பள்ளியில் 36 வகுப்பறைகள், பிற வசதிகள் இருக்கும்.

வடிவமைப்பு, இதர நடவடிக்கைகளை தொடர்ந்து கட்டுமானப் பணி விரைவுபடுத்தப்படும்.

குறிப்பாக சைபர்ஜெயா 2 ஆரம்பப் பள்ளி வரும் 2028ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கல்வியமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset