நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிக விலையில் உணவுகளை விற்கும் வர்த்தகர்களைப் புறக்கணியுங்கள்: அமைச்சர் எச்சரிக்கை

புத்ராஜெயா: 

அதிக  விலையில் உணவுகளை விற்கும் வியாபாரிகளைப் புறக்கணிக்கும்  அதிகாரம் பயனீட்டாளர்களுக்குள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் புஸியா சாலே கூறினார்.

ரமலான் சந்தைகளில்  உணவுப் பொருட்களின் விலைகள் அதிகமாகவுள்ளது. 

அதிக விலையை நிர்ணயிக்கும் வர்த்தகர்களிடம் பொருள்களை வாங்குவதைப் பயனீட்டாளர்கள் தவிர்க்கலாம் என்று அவர் கூறினார்.

உணவு விலை அதிகரிப்பு தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெற்றாலும் வர்த்தகர்கள் அதிக லாபம் ஈட்டுவது,  நியாயமற்ற விலை உயர்வைச் சுமத்துவதைத் தடுப்பதில்  அமைச்சு உறுதியாகவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 

வர்த்தகர்கள் தங்கள் உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்க பயனீட்டாளர்கள் கட்டாயப்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரமலான் சந்தைகளில் முர்தாபாக் உணவு விலை உயர்வை உதாரணம்  காட்டிய அவர், இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும் வெங்காயம் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அதன் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்றார்.

உணவுப் பொருள் விலையேற்றம் தொடர்பில் அமைச்சு  126 புகார்களைப் பெற்றுள்ளதாகவும் 11 புகார்கள் மீது அது  விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset