நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாய்ம் வழக்கில் சிங்கப்பூர் கோடீஸ்வரர், முன்னாள் ஜிஎல்சி தலைவரை எம்ஏசிசி விசாரித்தது

புத்ராஜெயா:

துன் டாய்ம் ஜைனுதின் மீதான எம்ஏசிசி விசாரணை வளையத்திற்குள் இரண்டு பிரபலமான கார்ப்பரேட் நபர்களை கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

இந்த விசாரணையில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த உள்ளூர் சொகுசு சொத்துடமை அதிபரான அக்பர் கான் என்று சிஎன்ஏ சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

டாய்மைப் போலவே, 83 வயதான தொழிலதிபர் அக்பர் கானும் அவரது சொத்துக்கள், அவரது குடும்பத்தின் நிதி இருப்புக்களை அறிவிக்க எம்ஏசிசியால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்பர் பிஆர்டிபி மேம்பாட்டு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர், தலைவர் ஆவார்.

இது ஆஸ்திரேலியா, லண்டன், பாகிஸ்தானிலும் திட்டங்களைக் கொண்ட ஒரு சொகுசு சொத்து மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.

இதற்கிடையில், அக்பரை விசாரிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அது நன்கு அறியப்பட்ட ஜிஎல்சி தலைவர்  ஒருவரையும் விசாரித்ததாக சிஎன்ஏ அறிக்கை கூறுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset