நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2019 ஆம் ஆண்டு முதல் 990 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: உள்துறை அமைச்சர் 

கோலாலம்பூர்: 

2019-ஆம் ஆண்டு முதல் 990 மில்லியன் மதிப்பிலான  போதைப் பொருள்களை மலேசியா பறிமுதல் செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தல், ஊழல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு இடையிலான தொடர்பை அறிந்த மலேசியா, கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான பயனுள்ள உத்திகளைச் செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

மேலும், தங்கள் தரப்பு சட்ட அமலாக்க முகவர் 98 ரகசிய ஆய்வகங்களை வெற்றிகரமாக அகற்றி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 351 நபர்களைக் கைது செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைக் கையால்வதில் மலேசிய முன்னேற்றமடைந்திருந்தால் இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

போதை மருந்துகள், சைக்கோட்ரோபிக் பொருட்களின் விநியோகத்தை கட்டுப்படுத்துவதில், 2020-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மொத்தம் 16,865 இறக்குமதி, ஏற்றுமதி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் சைஃபுடின் தெரிவித்தார். 

புதிய பொருட்களைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு ஆய்வக கண்டுபிடிப்புகள் நமது நாட்டின் சட்டங்களின் கீழ் தொடர்புடைய பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்கான அடிப்படையாக செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

போதைப்பொருள் பரவலைக் குறைப்பதற்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கும் வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதாக அவர் கூறினார்.

ஒப்பந்தக் கடமைகள் மற்றும் மலேசியாவின் போதைப்பொருள் எதிர்ப்பு மூலோபாயத் திட்டம் 2021-2025 ஆகியவற்றுக்கு இணங்க, உலகின் போதைப்பொருள் பிரச்சனையைக் கையாள்வதில் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க மலேசியா உறுதியளித்ததாக சைஃபுடின் கூறினார்.

சட்டவிரோத மருந்துகளின் உற்பத்தி, சட்டவிரோத விநியோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மற்ற நாடுகளுடன் கூட்டுறவை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset