நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி வழக்கு குறித்து முன்னாள் தேசிய வங்கி ஆளுநரிடம் ஏன் விசாரனை நடத்தவில்லை?: புவாட் கேள்வி

கோலாலம்பூர்:

1 எம்டிபி வழக்கு தொடர்பாக தேசிய வங்கியின் முன்னாள் ஆளுநர் டான்ஸ்ரீ ஜெத்தி அக்தாரிடம் ஏன் விசாரனை நடத்தப்படவில்லை என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர்.முஹம்மத் புவாட் சர்காஷி கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஜெத்தியின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவரிடம் ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றார் அவர். 

ஏப்ரல் 4-ஆம் தேதி டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முஹம்மத் ஷாஃபி அப்துல்லாவிடம் விசாரணை நடத்தியபோது, ​​முக்கிய அரசுத் தரப்பு சாட்சியான ஜாஸ்மின் லூ ஐ ஸ்வான் கூறியதை பல்வேறு தரப்பினர் மறந்துவிட்டது போல் தெரிகின்றது என்று அவர் கூறினார். 

அவர் 1எம்டிபி வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ளார். ஜெத்தியின் பெயரை ஜோ லோ பலமுறை குறிப்பிட்டதை அவர் உறுதிப்படுத்தினார். 

1 எம்டிபி-க்கும் தேசிய வங்கிக்குமிடையே சிக்கல் இருந்தால், ஜெத்தி நிர்வகிப்பார் என்று ஜோ லோ கூறுகிறார்.

அதற்கு முன், ஜோனா யூ, அம்பாங்க் மேலாளரும் ஜோ லோ தன்னிடம் அடிக்கடி ஜெத்தி ஜோ லோவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், ஒன்றாக விடுமுறைக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறியதை ஒப்புக் கொண்டார்.

அனைத்து வாக்குமூலங்களும் நீதிமன்றத்தில் செய்யப்பட்டன. 

இப்போது வரை, பல கேள்விகள் எழுந்தாலும், ஜெத்தி விசாரிக்கப்படவில்லை என்று அவர் கேள்வியை முன் வைத்துள்ளார். 

1MDB வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜோ லோவிடமிருந்து ஜெத்தி குடும்பம் 700 மில்லியன் வெள்ளி பெற்றதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், ஜெத்தி குடும்பத்தின் வங்கிக் கணக்கில் ஜோ லோ 700 மில்லியன் செலுத்தியதாக தி எட்ஜ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதில் 65 மில்லியன் ரிங்கிட் திருப்பிக் கொடுக்கப்பட்டதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் சிங்கப்பூர் காவல்துறையும் உறுதி செய்தன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset