நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்படும்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பங்கேற்பவர்களின் வயது வரம்பு 55 வயதிலிருந்து 60 ஆக உயர்த்தப்படும்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்கு  தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது.

அத்திருத்தம் விரைவாக செய்து இப்புதிய நடைமுறை இந்த ஆண்டு அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

இல்லத்தரசிகளுக்கு ஓய்வு பெறும் வயது கிடையாது. சொக்சோ திட்டத்தில் உள்ளதைப் போலவே தொழிலாளர் சட்டத்திலும் அதை சீரமைப்போம்.

குறிப்பாக வயது வரம்பு 55இல் இருந்து 60 ஆண்டுகளாக மாற்றப்படும் என்று அவர் கூறினார்.

இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு அமைப்பின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் 720,000க்கும் மேற்பட்ட பெண்கள் பாதுகாப்பு வழங்கப்படும்.

கடந்தாண்டு மே 30ஆம் தேதியன்று, முன்னாள் மனிதவள அமைச்சர் வி சிவக்குமார், 

முந்தைய ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 176,000 இல்லத்தரசிகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

2023இல் அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட 500,000 இலக்கில் 35% இல்லத்தரசிகள் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

பொருளாதாரம் அல்லது மற்ற துறையில் பணி புரியும் பெண்களை அங்கீகரிப்பதை அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்தாண்டின் 200,000 இல்லத்தரசிகளை விட இத்திட்டத்தின் கீழ் 500,000 பேருக்கு பாதுகாப்பு வழங்குவதே அமைச்சின் இந்த ஆண்டு இலக்கு என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset