நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறைந்தபட்ச சம்பளத்தை அரசு மறு ஆய்வு செய்யும்: ஸ்டீவன் சிம் தகவல் 

கோலாலம்பூர்:

முதலாளிகள் உட்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு இந்தாண்டு குறைந்தபட்ச சம்பளத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார். 

மக்களவையில் தனது அமைச்சுக்கான அரச ஆணை விவாதத்தை முடித்த போது இந்த விடயத்தை ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

இந்தாண்டு, தேசிய சம்பள ஆலோசனை மன்றச் சட்டம் 2011 (சட்டம் 732) அடிப்படையில், குறைந்தபட்ச ஊதிய விகிதம் மதிப்பாய்வு செய்யப்படும்.

முதலாளிகள், பணியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் என்று அவர் கூறினார்.

பேங்க் நெகாராவின் பரிந்துரைகள் மற்றும் ஊழியர்களின் சேம நிதியால் நிர்வகிக்கப்படும் நிதியியல் கல்வியறிவுத் திட்டமான பெலன்ஜாவாங்கு திட்டத்தின் அடிப்படையில் எழுப்பிய ரோடியா சாபியின்  கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset