நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 ஆண்டு இழுப்பறிக்கு பின் சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்தில் செயல்படுகிறது

சிரம்பான்:

பத்து ஆண்டு கால தாமதத்திற்கு பின் சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்தில் செயல்பட தொடங்கியுள்ளது.

10 ஆசிரியர்களுடன் 40 மாணவர்கள் இப் புதிய பள்ளியை பயன்படுத்துகின்றனர்.

புதிய சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டிடத்திற்கான கட்டுமானத் திட்டம் 2012இல் தொடங்கப்பட்டு 2014இல் முடிவடைந்தது.

தீயணைப்பு கருவிகள், வேறு சில வசதிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களின் அம்சங்கள் காரணமாக இந்தக் கட்டிடத்தின் பணிகள் நீண்ட காலமாக தாமதமாகி வந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இப் பள்ளி இப்போது தான் திறக்கப்பட்டுள்ளது என்று நெகிரி செம்பிலான் கல்வி இலாகா இயக்குநர் டத்தோ டாக்டர் ரோஸ்லான் ஹுசைன் கூறினார்.

May be an image of 3 people and people studying

இதனிடையே புதியதாக திறக்கப்பட்டுள்ள பள்ளிக்கு கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் வருகை புரிந்தார்.

சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி போன்று பல பள்ளிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் நிகழலாம்.

இதற்கு மாநில, மாவட்ட கல்வி இலாகாக்கள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான உத்தரவை கல்வியமைச்சு உடனடியாக வழங்குவதாக அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

வசதிகளுடன் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி ஒரு சில காரணங்களால் திறக்கப்படாதது மாணவர்களுக்கு தான் பாதிப்பு என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset