நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோழியின் விலை 30 சென் அதிகரிப்பு: முஹம்மத் சாபு 

கோலாலம்பூர்:

கோழியின் விலை 30 சென் அதிகரித்தாலும் அதன் உச்சவரம்பு விலையான 11.40 வெள்ளியைத் தாண்டாததால் நிலைமை இன்னும் கட்டுக்குள் இருப்பதாக  விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்தார். 

கோழியின் விலை உயர்வால் மக்கள் சிரமப்படாமல் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் இணைந்து தமது தரப்பு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கால்நடை சேவைகள் துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்படுகிறது.  

கோழியின் விலை, தாங்கள் முன்பு நிர்ணயித்த விலையுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் நிலையாக உள்ளது. 

மைடின் பேரங்காடியில் கோழி 9.00 ரிங்கிடுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. சில சமயங்களில் 7.90, 8.00 வெள்ளிகளில் கோழி விற்பனை செய்யப்படுகிறது. 

5.50-ஆக விற்கப்பட்ட கோழி 30 சென் அதிகரித்து 5.80-க்கு விற்கப்பட்டது.  

இது விலை அரசு நிர்ணயம் செய்த விலையை விட அதிகமாக இல்லை என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset