நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வயது முதிர்ந்த மக்களை பாதுகாக்க அரசாங்கத்தின் திட்டம் என்ன?: மக்களவையில் டத்தோஶ்ரீ சரவணன் கேள்வி

கோலாலம்பூர்:

நாட்டில் வயது முதிர்ந்த மக்களை  பாதுகாக்க அரசாங்கத்தின் திட்டங்கள் என்னவென்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் மனிதவள அமைச்சரின் கூடுதல் கேள்வி நேரத்தில் பேசிய அவர், வரும் 2030 ஆண்டில் நாட்டில் அதிகமான வயது முதிர்ந்த மக்கள் வாழும் நாடாக மலேசியா விளங்கும்.

தற்போது தொழிலாளர்களாக இருக்கும் அவர்கள் வயது முதிர்ந்த பின் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அவர்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் என்னென்ன திட்டங்களை கொண்டிருக்கிறது என்பது என்னுடைய கேள்வியாகும்.

அப்படி திட்டங்கள் இல்லையென்றால் மனிதவள அமைச்சு அத் திட்டங்கள் குறித்து உரிய ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset