நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் சந்தையில் முட்டை 4.50 ரிங்கிட்டு விற்பனை; அமைச்சின் நடவடிக்கை என்ன?: அமினோல்ஹுடா மக்களவையில் கேள்வி

கோலாலம்பூர்:

ரமலான் சந்தையில் வியாபாரிகள் பொறித்த முட்டைகளை (Telur mata) 4.50 ரிங்கிட் விலைக்கு விற்று ஆதாயம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் உள்நாட்டு வர்த்தகம்,வாழ்க்கைச் செலவின அமைச்சின் நடவடிக்கை என்னவென்று ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹுடா ஹசான் கேள்வி எழுப்பினார்.

ரமலான் சந்தையில் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாக பலர் புகார் கூறுவதை சமூக ஊடகங்களில் நாம் பார்க்கலாம்.

குறிப்பாக பொறித்த முட்டை 4.50 ரிங்கிட் விலைக்கு விற்கப்படுவது குறித்து சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு சந்தையில் அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அது ஏன்?

ஆகவே இவ்விவகாரத்தில் அமைச்சு உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அணுகுமுறை மேம்படுத்தப்பட வேண்டும்.

மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலியிடம் கூடுதல் கேள்விகளைச் சமர்ப்பித்த போது அமினோல்ஹுடா ஹசான் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset