நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் வாழ்ந்ததை ஒவ்வோர் இந்தியனும் ஆவணப்படுத்த வேண்டும்: டத்தோ ஞானபாஸ்கரன்

 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் வாழ்ந்ததை ஒவ்வொரு இந்தியனும் ஆவணப்படுத்த  வேண்டும் என்று டத்தோ டாக்டர் ந. ஞானபாஸ்கரன் கூறினார்.

என் பாட்டனார் முதல் பல தலைமுறைகளாக நாங்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறோம்.

இந்த நாட்டில் வாழும் இந்திய சமுதாய மக்களுக்கு பல சேவைகளையும் எங்கள் குடும்பம் வழங்கியுள்ளது.

குறிப்பாக ஜொகூர் மாநிலத்தில் எங்களின் சேவைகளை அனைவரும் அறிவார்கள்.

அதே வேளையில் மருத்துவரான நான் மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் சேவையாற்றி உள்ளேன்.

கோவிட்-19 காலக்கட்டத்தில் அதிகமாக ஊடகங்களில் விழிப்புணர்வூட்டும் பேட்டி வழங்கியதில் நானும் ஒருவன்.

இப்படி எங்கள் குடும்பப் பயணத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எடுக்கப்பட்ட முயற்சிதான் வரலாறு கண்ட சகாப்தம்; மூன்று தலைமுறையின் பயணம் எனும் நூல்.

இந்த நூல் வெளியீடு வரும் மார்ச் 31ஆம் தேதி மதியம் 3 மணிக்கு பெட்டாலிங் ஜெயா தோட்டமாளிகையில் நடைபெறவுள்ளது என்று அவர் கூறினார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் இங்கு வந்து கடுமையாக உழைத்து நாட்டை மேம்படுத்தியுள்ளனர்.

இருந்தாலும் நம்மை இன்னமும் சிலர் வந்தேறிகள் என்று அழைக்கிறார்கள். அப்படி அழைக்க யாருக்கும் உரிமை இல்லை.

காரணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த நாட்டில் பங்கு உள்ளது.

ஆகவே இந்த நாட்டில் வாழ்ந்ததையும் இந்த நாட்டுக்காக செய்த தியாகத்தையும் ஒவ்வோர் இந்தியனும் ஆவணப்படுத்த வேண்டும்.

இது தான் இந்நூல் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட மகத்தான முயற்சியாகும்.

இந்நூல் வாயிலாக கிடைக்கும் பணம், செலவு போக பதிவு பெற்ற கல்வி நிதி வாரியங்களுக்கு வழங்கப்படும்.

ஆகவே பொதுமக்கள் இந்த புத்தக விழாவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று டத்தோ ஞானபாஸ்கரன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset