நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளை அரிசி விவகாரத்தில் பிரதமருக்கு சரியான தகவல் வழங்கப்படுகிறதா?: சைட் அபு ஹுசைன்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் வெள்ளை அரிசி வழங்கப்படுவது குறித்து, வாழ்க்கைச் செலவுக்கான தேசிய நடவடிக்கை வாரியத்தின் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சரியான தகவல்  வழங்கப்படுகிறதா?.

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினரும் அவ்வாரியத்தின் உணவு விவகாரப் பிரிவுத் தலைவருமான டத்தோ சையிட் அபு ஹுசின் ஹபீஸ் இக் கேள்வியை எழுப்பினார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவரது குழுவினர் நடத்திய கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

தீபகற்ப மலேசியாவில்  30 இடங்களில் கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்திற்ககு பிரதமர் பொறுப்பேற்று கண்டிக்க வேண்டியிருந்தது.

அதேசமயம் வாரியத்தின் சந்திப்பின் போது பொறுப்பான அதிகாரியின் அதிகாரி துல்லியமான தகவலை (சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகம்) கொடுத்தாரா அல்லது நேர்மாறாக அளித்தாரா என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

வாரிய கூட்டத்தின் போது ​​நெல், அரிசி கட்டுப்பாட்டு இயக்குநர் ஜெனரல் பிரதமரிடம் அரிசி போதுமானது, சந்தையில் கிடைக்கிறது என்று கூறினார், 

ஆனால் ஒரு பெரிய பேரங்காடியின் பிரதிநிதி வேறுவிதமாக கூறினார்.

இதன் பொருள் என்னவென்றால், பொறுப்புள்ள அதிகாரி பிரதமருக்கு சரியான தகவலை வழங்கவில்லை. இந்த சூழ்நிலை பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset