நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் ஆறு பேரின் மரணத் தண்டனை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

புத்ராஜெயா:

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசுத் துணை வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.

முன்னாள் நோயியல் நிபுணர், கர்னல் டாக்டர் ஆர் குணசீகரன், கடன் கொடுத்த எஸ்.ரவி சந்திரன்,  நான்கு வேலையற்றவர்களான ஆர். தினீஸ்வரன், ஏ.கே. தினேஷ் குமார், எம் விஸ்வநாத், எஸ். நிமலன் ஆகியோரே குற்றம் நிருபிக்கப்பட்ட அந்த 6 பேராகும்.

தலைமை நீதிபதி டத்தோ ஹட்ஹரியா சைட் இஸ்மாயில், நீதிபதிகள் டத்தோ அஹ்மத் ஜைய்டி இப்ராஹிம், டத்தோ அஸ்மி ஆரிபின் ஆகியோர் அடங்கிய நீதிபதி குழு ஒருமனதாக முடிவெடுத்தது.

கடந்த 2020 ஜூலை 10ஆம் தேதி அன்று கெவின் மொராய்ஸ் கொலை செய்ததாகக் கண்டறியப்பட்ட பின்னர், உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் மரண தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset