நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணைப் பிரதமருடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒதுக்கீடு கிடைக்கவில்லை: சைட் சாடிக்

கோலாலம்பூர்:

துணைப் பிரதமருடன் மூன்று முறை ஆலோசனை நடத்தியும் தனது தொகுதிக்கு எந்த ஒதுக்கீடும் கிடைக்கவில்லை.

ஆகவே இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் வலியுறுத்தினார்.

மக்களவை இணையதளத்தில் வெளியிடப்பட்ட வாய்மொழி கேள்விகள் குறித்த மக்களவை அறிவிப்பில் இந்த குற்றச்சாட்டு உள்ளது.

சைட் சாடிக் எழுப்பிய இக்கேளவிக்கு பதிலளித்த பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஷாலேஹா முஸ்தபா பதிலளித்தார்.

மூவார் நாடாளுமன்ற தொகுதியில் மேம்பாட்டு திட்டங்களுக்காக 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதமரின் சிறப்பு ஒதுக்கீடு, ஐந்தாண்டு மலேசியத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட  கூடுதல் நிதியாகும்.

இந்த ஒதுக்கீட்டின் விநியோகம் தற்போதைய கொள்கையின்படி அரசாங்கத்தின் தற்போதைய நிதி திறன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset