நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலக்கவியல் பாதுகாப்பு தொடர்பான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும்: டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

நாட்டில் செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான சவால்களைச் சமாளிக்க அரசாங்கம் இலக்கவியல் பாதுகாப்புக்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என்று சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் கூறினார் 

இந்த சட்டமசோதாவை பிரதமர் துறைக்கான சட்டவிவகாரத்துறையினர் நன்கு ஆராய்ந்து சட்டமசோதாவை உருவாக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் ஆணைக்கினங்க இலக்கவியல் பாதுகாப்பு தொடர்பான சட்டமசோதா விரைந்து தாக்கல் செய்ய அரசாங்கம் முனைப்பு காட்டும் என்று அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமசோதா விரைந்து தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கடந்தாண்டு ஜூன் மாதம் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகளாவிய நிலையில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வேகம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. அதிலுள்ள சவால்களைச் சமாளிக்க இந்த சட்டமசோதா அவசியமாகும் என்று அஸாலினா குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset