நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வட தீபகற்ப மலேசியாவில் கடுமையான வெப்பம் நிலவக்கூடும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

கோலாலம்பூர்: 

வட தீபகற்ப மலேசியாவில் கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கெடா மாநிலத்தில் உள்ள பாடாங் தெராப், கோத்தா ஸ்டார், பொக்கோ செனா, பெண்டாங், சிக், பாலிங் ஆகிய பகுதிகளிலும் பேராவிலுள்ள உலு பேராக் பகுதிகளிலும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 

35 முதல் 37 பாகை வெப்பம் வரை சம்பந்தப்பட்ட பகுதிகள் பதிவு செய்யும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் மாத இறுதி வரை கிளாந்தான், பஹாங், பேராக் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட மோசமான வெப்ப வானிலை இருக்கும் என்றூ மெட் மலேசியா தெரிவித்தது. 

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை கடுமையான வெப்பம் நிறைந்த வானிலை ஏற்படும் என்று மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் தெரிவித்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset