நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேல் பேரிச்சம் பழங்கள் கிளந்தான் சந்தையில் விற்பனையா?: மாநில அமைச்சகம் மறுப்பு

கோலாலம்பூர்:

இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்தவொரு பேரிச்சம் பழங்கள் தயாரிப்புகளும் கிளந்தான் சந்தையில் இல்லை.

கிளந்தான் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் இதனை உறுதிப்படுத்தினார்.

இதுவரை பேரிச்சம் பழங்கள் தொடர்பான எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை.

இருந்தாலும் கிளந்தான் மாநில அதிகாரிகள் எப்போதும் அத்தியாவசிய பொருட்கள் மீதான சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.

இந்தச் சோதனையில் அப்படி ஏதும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக, ரமலான் மாதத்தை முன்னிட்டு கிளந்தான் மாநில சந்தையில் இஸ்ரேலின் பேரிச்சம் பழ பொருட்கள் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவு அறவே இல்லாத நிலையில், எப்படி மலேசியாவிற்கு அந்த நாட்டு தயாரிப்பு கொண்டு வரப்பட்டது என்ற கேள்வியை எழுப்புகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset