நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் முதலீடு செய்ய ஜெர்மன், ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு

பெர்லின்:

ஆசியான் சீனச் சந்தைகளில் ஜெர்மனி, ஐரோப்பிய வணிகங்களின் மையமாக மலேசியா திகழும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஐரோப்பிய முதலீட்டாளர்களுக்கு ஒரு திறந்த அழைப்பை வெளியிட்ட பிரதமர்,

மலேசியாவில் திறமையான தொழிலாளர் படை, நவீன உள்கட்டமைப்பு, தெளிவான ஒழுங்குமுறை சூழல், மிகப்பெரிய வளர்ச்சி திறன் உள்ளது.

மலேசியா 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற ஒரு உருமாறும் பொருளாதாரம் கொண்ட நாடாகும்.

குறிப்பாக ஜெர்மனியின் வணிகங்களுக்கான சரியான முதலீட்டு நாடாகவும் மலேசியா விளங்குகிறது.

மலேசியா, ஜெர்மனிக்கு பரந்த ஆசியான் சந்தையில் நுழைய ஒரு முதன்மை நுழைவாயிலாக விளங்கும்.

இது 2030 க்குள் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்.

பொருளாதார அதிவேக வளர்ச்சிக்கு இது  முதன்மையானது.

பெர்லினில் நடைபெற்ற சிறு, நடுத்தர வணிகர்களில் எதிர்கால தின நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset