நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர விழா  3 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள்: டத்தோ தமிழ்செல்வம்

கோலாலம்பூர் -

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர விழாவில் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஆலய தலைவர் டத்தோ க. தமிழ்செல்வன் கூறினார்.

நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விழா பெரிய அளவில் நடத்தப்படவில்லை.

குறிப்பாக கடந்தாண்டு ஆலயத்தில் திருப்பணிகள் நடந்தது. ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

தற்போது 93ஆவது பங்குனி உத்திர விழா  ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

இதன் உச்சக்கட்டமாக வரும் மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை பங்குனி உத்திர விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பால்குடம் ஏந்தியும் காவடிகள் ஏந்தியும் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் செய்து வருகிறது.

குறிப்பாக ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்படுவார்கள்.

இதைத் தவிர்த்து இந்த விழாவை முன்னிட்டு ஆல ல்ய சுற்றுவட்டாரத்தில் தற்காலிக கடைகளும் அமைக்கப்படவுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பத்துமலையிலிருந்து பக்தர்கள் பாதை யாத்திரையாக மாரானுக்கு வருவார்கள்.

இவ்வாண்டு 12 குழுக்களாக 1,500 பேர் பாத யாத்திரையாக மாரானுக்கு வரவுள்ளனர் அப்படி வருபவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மார்ச் 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஸ்ரீ கங்கை இசைக் குழுவின் குமார் தலைமையில் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதைத் தவிர்த்து இந்த விழாவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங், சபாய் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இந்த விழாவில் கலந்து மாரான் மரத்தாண்டவரின் அருளை பெற்று செல்லுமாறு டத்தோ தமிழ்ச்செல்வன் கேட்டு கொண்டார்.

இதனிடையே தலைநகரை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆலயத்தின் துணைத் தலைவர் மருதவேல், செயலாளர் டாக்டர் ஜெயேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset