நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாபர் சாதிக்கின் போஸ் மலேசியர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் கூடுதல் தகவல்கள் தேடப்படுகிறது: ஐஜிபி

கோலாலம்பூர்:

மலேசியக் குடியுரிமை பெற்ற இந்தியப் போதைப் பொருள் கடத்தல்களுக்கு முதலையாகச் செயல்பட்ட நபர் குறித்து இந்தியக் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தேசியக் காவல்துறை கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிப்பதாக ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின்ன் ஹுசைன் தெரிவித்தார். 

இந்த விவகாரம் குறித்துத் தேசியக் காவல்துறைக்கு எந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்றார். 

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் தரவுத்தள மதிப்பாய்வின் முடிவுகளின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை இந்தியப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் நாட்டில் எந்தப் போதைப்பொருள் கடத்தல் பட்டியலிலும் இல்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு தொடர்பு அதிகாரியிடம்  தேசிய காவல்துறை கூடுதல் தகவல்களைக் கோருகின்றது.

தற்போது, ​​ஜேஎஸ்ஜேஎன் இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் எந்த இருதரப்பு உறவையும் கொண்டிருக்கவில்லை.

மேலும் எந்தவொரு ஒரு நடவடிக்கையும் சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) மற்றும் அமெரிக்காவின் போதைப்பொருள் அமலாக்க நிறுவனம் (DEA) மூலம் நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார். 

தேசியக் காவல்துறை, குறிப்பாக ஜேஎஸ்ஜேஎன், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று ரஸாருடின் கூறினார்.

தமிழ் திரையுலக பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட மலேசிய திரைப்பட விநியோகஸ்தர் இந்தியப் போதைப் பொருள் முதலாளி என்று சமீபத்தில் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. 

1.13 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சர்வதேசப் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கடந்த சனிக்கிழமை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து இது நிகழ்ந்துள்ளது.

மூத்தப் பத்திரிகையாளரும் சவுக்கு ஊடகத்தின் உரிமையாளருமான ஏ ஷங்கர் யூடியூப்பில் அளித்த பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset