நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா பணிக் குழுத் தலைவராக பணியாற்ற பிராபாகரன் தடுக்கப்படுகிறாரா?: கணபதி ராவ் கேள்வி

கோலாலம்பூர்:

மித்ரா பணிக் குழுத் தலைவராக பணியாற்ற பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிராபாகரன் தடுக்கப்படுகிறாரா என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.

கடந்த காலங்களில் மித்ரா பணிக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.  ஆனால் அதைப் பற்றி கேள்வி எழுப்பினேன் என்ற குற்றச்சாட்டுகளால் நான் நீக்கப்பட்டேன்.

அதன் பின் பிரதமர் துறையின் கீழ் இருந்து மித்ரா தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு மாற்றப்பட்டது. அதற்கும் நான் கேள்வி எழுப்பினேன்.

தற்போது மித்ரா பணிக் குழுவின் தலைவராக பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான் முழு ஆதரவு தந்தேன்.

ஆனால் அக் குழுவின் தலைவராக இருந்து செயல்பட அவர் தடுக்கப்படுகிறாரா என்பதுதான் என்னுடைய கேள்வியாக உள்ளது.

மித்ரா பணிக் குழுத் தலைவர் என்பது மிகவும் முக்கியமான பொறுப்பாகும். ஆகவே பிரபாகரன் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கணபதிராவ் கூறினார்.

இதனிடையே  தாய்மொழிப் பள்ளிகள் நிலை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தாய்மொழிப் பள்ளிகளின் நிலை அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக உள்ளது.

கூட்டரசு நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இருந்தாலும் தாய்மொழிப் பள்ளிகளை வைத்து அரசியல் நடத்துவதற்கான நோக்கம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.

ஆகவே பொறுப்பற்றவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கணபதிராவ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset