நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தாண்டு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை 99 விழுக்காட்டை எட்டியுள்ளது: ஃபட்லினா

சிரம்பான்: 

இந்தாண்டு தொடக்கப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. 

இந்த அதிகரிப்பு கல்வி அமைச்சகத்தால் கல்வி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி உருமாற்று திட்டத்தின் பலனைக் குறிப்பதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார். 

தேசியப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 99 விழுக்காடாகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 95 விழுக்காடாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வருங்காலத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரிக்க, தங்கள் தரப்பு தொடர்ந்து பாடுபடும் என்றார் அவர். 

ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை 99 விழுக்காடை எட்டியுள்ளது. 

இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மிகவும் அசாதாரணமானது. 26 புதிய பள்ளிகளைக் கேட்டபோது, தங்களுக்கு 26 பள்ளிகள் கிடைத்தது. இது மடானி அரசாங்கத்திற்கு ஓர் அசாதாரண வெற்றி என்றார் அவர். 

இதற்குப் பிறகு அடுத்த கவனம் அனைத்து அரசுப் பள்ளிகளையும் உள்ளடக்கிய பாலர் பள்ளி மட்டத்தில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் குழந்தைகளுக்குக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய கடமைகளில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கல்வி தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் குழந்தைகள் இளைய தலைமுறையினரின் நலனுக்காக சிறந்த முறையில் கையாளப்படுவதை அமைச்சகம் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset