நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வியமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அரசியல்வாதிகள், அரசு சாரா இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்: ஃபட்லினா சிடேக்  

சிரம்பான்: 

பிரமுகர்கள், அரசியல்வாதிகள், அரசு சாரா நிறுவனங்களின் அழைப்பை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலிருந்து மாணவர்கள் தடுக்கப்படுவதில்லை. 

மாறாக, அந்த நிகழ்ச்சிகள் யாவும் கல்வி அமைச்சகம் அமைத்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். 

அரசியல்வாதிகள் அல்லது அரசு சாரா தலைவர்கள் உட்பட எந்தவொரு தரப்பினரும் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் அல்லது நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு நிகழ்ச்சிக்குச் செல்வதற்கும், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கும் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும், மலேசிய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சிகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் தங்களிடம் இருப்பதாகவும், அவை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், மாணவர்களின் நலன்களை உள்ளடக்கியதால் வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது குறித்து தனது தரப்பு எப்போதும் கண்டிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset