நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்ஆர்சி வழக்கில் 25 சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க வேண்டும்: துணை அரசு வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

எஸ்ஆர்சி 27 மில்லியன் நிதி தொடர்பான முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் ஊழல் வழக்கின் விசாரணையில்  20 முதல் 25 சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க வேண்டும்.

துணை அரசு வழக்கறிஞர் முகமட் அஷ்ராப் அட்ரின் கமருல், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இது குறித்து தெரிவித்தார்.

வழக்கு விசாரணை நீதிபதி கே. முனியாண்டியிடம், மொத்தம் 20 முதல் 25 சாட்சிகள் விசாரணைக்கு உள்ளனர்.

இதுவரை ஒரு சாட்சியின் விசாரணை அறிக்கையை மட்டுமே தயாரிக்க முடிந்துள்ளது.

ஆகவே மற்ற சாட்சிகளின் விசாரணை அறிக்கைகளைத் தயாரிக்க அரசுத் தரப்புக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக அஷ்ராப் கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி முனியாண்டி மே 27ஆம் தேதியை வழக்கு நிர்வாகம் நடைபெறும்.

செப்டம்பரில் 5 நாட்களுக்கு முழு விசாரணை நடைபெறும் என அறிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட நஜிப் சார்பில் வழக்கறிஞர் முகமது ஷாஃபி அப்துல்லாஹ் ஆஜரானார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset