நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனித உரிமைகள் குழுவின் அறிக்கையைப் புறக்கணித்த உள்துறை அமைச்சு: சுவாராம் கண்டனம் 

பெட்டாலிங் ஜெயா:

குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சித்திரவதை செய்வது குறித்து மனித உரிமைகள் குழு வழங்கிய அறிக்கையைப் புறக்கணித்ததற்காக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலை மனித உரிமைக் குழு கண்டித்துள்ளன.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில், தடுப்பு மையத்தில் கைதிகள் எதிர்கொள்ளும் சித்திரவதைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அறிக்கையில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தரப்பில் பயன்படுத்தக் கூடிய  அறிக்கைக்கு இணங்கவில்லை என்றும் சைஃபுடின் தெரிவித்தார். 

சைஃபுடின் ஆராய்ச்சி முறையைப் படித்து, கேள்விக்குரியதாக அவர் கருதும் அம்சங்களைப் பற்றி மனித உரிமை குழுவிடமிருந்து விளக்கம் பெற வேண்டும் என்று சுவாராமின் இயக்குநர், செவன் துரைசாமி கூறினார். 

உள்துறை அமைச்சருக்கு என்ன உறுதியான ஆதாரம் தேவை  என்பதையும் அவர் விளக்க வேண்டும்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மீறல்களைத் தீவிரமாக எடுத்து அதற்கேற்ப விசாரிப்பதே ஒரே வழி என்று அவர் கூறினார்.

கடந்த காலச் சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் விசாரணையின் விளைவாக, அதைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளும் மாறவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset