நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் மாதத்தில் உணவை வீணாக்காதீர்கள்: துணைப் பிரதமர் வலியுறுத்து 

கோலாலம்பூர்: 

ரமலான் மாதத்தில் உணவை வீணடிக்கும் பழக்கத்தைக் கைவிடுமாறு துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

உணவு விரயம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட செயல்லாகும். அது சுற்றுச்சூழல் பேண்தகு கொள்கைக்கும் எதிரானது என்று அவர் கூறினார்.

இந்த நோன்பு மாதத்தில் அதிகப்படியான விரயம் செய்வதைக் குறைக்க ஒருவரையொருவர் நினைவூட்டுவோம் என்று அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கடவுள் மீதான பக்தியையும், ஒருவருக்கொருவர் அன்பையும் அதிகரிக்க முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டை இரட்டிப்பாக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

இந்த ரமலான் மாதம் நம்மை மேம்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.  

நம்முடைய ஒவ்வொரு செயலும் கடவுளால் கருணை, அன்பு, மன்னிப்பு, ஆசீர்வாதங்களுடன் ஏற்றுக் கொள்ளப்படும். 

இதே வேளையில், காசா மக்களுக்காகவும் பிராத்தனை செய்யுமாறு கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset