நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும்: மலேசியா, ஜெர்மனி வலியுறுத்து

பெர்லின்:

மலேசியா, ஜெர்மனி காசாவில் நீடித்து வரும் போர் நிறுத்தம், பணயக் கைதிகளை விடுவிக்கவும்,  மனிதாபிமான உதவிகளை செய்யவும் அழைப்பு விடுத்துள்ளன.

பிரதமர் டத்தோஶ்ரீ   அன்வார் இப்ராஹிம், அவரது ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் இதனை வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக நிலவும் மோதலுக்கு இரு நாடுகளும் தீர்வுக்கு பாடுபட வேண்டும்.

சில நேரங்களில் எங்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனால்  காசா போர் போன்ற பிரச்சினைகளில் ஒத்துழைப்புகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.

அங்கு நிகழ்ந்து வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஓலாஃப்புடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset