நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓலிரூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 16 மாணவர்கள்: வாரியத் தலைவர் தகவல்

தைப்பிங்:

புதிய தவணைக்கான பள்ளிக்கூடம் தொடங்கிய வேளையில் ஓலிரூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் 16 மாணவர்கள் தங்களின் கல்வி பயணத்தை தொடங்யிருப்பதாக அப்பள்ளியின் வாரியக்குழு தலைவர் சண்முகவேல் தெரிவித்தார்.

கடந்தாண்டு 20ஆக இருந்த எண்ணிக்கை இவ்வாண்டு 16ஆக பதிவாகியிருந்தாலும் இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டு அது உயரவும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும்,தமிழ்ப்பள்ளி மீது நம்பிக்கையும் மொழி இன உணர்வையும் மேலோங்கை செய்து தன் வீட்டுப்பிள்ளை ஆரம்பக் கல்வியை தாய்மொழி பள்ளியில் தொடர்வதை பெருமையாக கருதி தமிழ்ப்பள்ளியில் குறிப்பாக ஓலிரூட் தமிழ்ப்பள்ளியிம் தன் பிள்ளையை பதிவு செய்த அனைத்து பெற்றோர்களுக்கும் அவர் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

அதுமட்டுமின்றி,ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கான சீருடையை வழங்கி வரும் சண்முகவேல் ஓலிரூட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் ஒவ்வொரு ஆண்டும் நனிச் சிறந்த அடைவுநிலையை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

முதலாம் ஆண்டில் மட்டுமின்றி 2024/2025ஆம் ஆண்டுக்காக புதிய பள்ளி தவணைக்காக பள்ளிகூடம் வருகை அளித்த மாணவர்களை வரவேற்கையில் சண்முகவேல் இதனை பதிவு செய்தார்.

மேலும்,தொடர்ந்து இப்பள்ளியின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பள்ளியின் வாரியக்குழு கவனம் செலுத்துவதோடு பள்ளி நிர்வாகத்தோடு இணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.

பள்ளி முதல் நாளில் மாணவர்கள் மத்தியில் சண்முகவேல் உரையாற்றுகையில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோசப்பின் இராயப்பன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சசிதரன் மற்றும் பள்ளியின் தொடர்பு அதிகாரி தலோகேஸ்வரன் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset